மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
1 கிளாஸ் கொத்தமல்லி டீயில் இவ்வளவு நன்மைகளா.. எப்படி செய்யலாம் பாக்கலாம் வாங்க..
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் வாசத்தை அதிகப்படுத்தும் வேலையை கொத்தமல்லி செய்து வருகிறது. இது மட்டுமல்லாமல் நம் உடலுக்கும் ஆரோக்கியத்தை மேம்படுத்த கொத்தமல்லி விதை முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இதனை தினமும் காலையில் எழுந்து டீயாக தயாரித்து குடிக்கும்போது பல நன்மைகள் உண்டாகிறது. கொத்தமல்லி டீயில் பாஸ்பரஸ், கால்சியம், புரோட்டின், விட்டமின் பி1, விட்டமின் ஏ போன்ற பல சத்துக்கள் கிடைக்கின்றது.
இந்த கொத்தமல்லி டீயை எப்படி செய்யலாம் என்று பாக்கலாம் வாங்க-
கொத்தமல்லி விதை
பனங்கற்கண்டு
தண்ணீர்
முதலில் கொத்தமல்லி விதையை நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பனங்கற்கண்டு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கொதித்த தண்ணீரில் கொத்தமல்லி விதையை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்பு வடிகட்டி தினமும் குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு போன்ற பல பிரச்சனைகளை சரி செய்யும்.