மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலை முதல் கால் வரை மாற்றத்தை தரும் வானவில் டயட் பற்றி தெரியுமா.?
பல்வேறு நிறங்களில் உள்ள காய்கறிகள், பழங்களை சேர்த்து சாப்பிடுவது தான் 'வானவில் டயட்'. இந்த வானவில் டயட்டில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளன.
நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள மைக்ரோசாப்ட், மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் அவசியம். அவை இந்த வானவில் டயட் மூலம் நமக்கு கிடைக்கின்றன. கலர் கலரான உணவுகளால் நமது ஆரோக்கியம் வலுவாகும். சிவப்பு நிற உணவுகள் இதயத்திற்கு நல்லது. ஆரஞ்சு நிற உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
மஞ்சள் நிற உணவுகள் புற்றுநோய்களிலிருந்து காக்கிறது. பச்சை நிற உணவுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. நீலம் மற்றும் ஊதா நிற உணவுகள் இரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும், இதய நோய் வராமல் தடுக்கவும் உதவுகின்றன.
வெள்ளை நிற உணவுகள் எலும்பு மற்றும் பற்களின் நலத்திற்கு உதவுகின்றன. இந்த வானவில் டயட் உடலுக்கு தேவையான பைடோகெமிக்கல்களை கொடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும் இந்த டயட் சருமத்தை மிருதுவாகவும், குடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.