"இந்த மாதிரி இருமல் வந்தால் காசநோயின் அறிகுறியாக இருக்கலாம்!"



Medical advice for continuous cough

காற்றின் மூலம் பரவும் ஒரு தொற்றுநோய் தான் காசநோய். இது நுரையீரலை பாதிக்கும். இதற்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தை ஏற்படுத்தும். காசநோய் பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியது மற்றும் தடுக்க கூடியது தான். இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல் மிக முக்கியம்.

medical

சாதாரணமாக இரண்டு மூன்று நாட்களில் இருமல் சரியாகி விடும். ஆனால் மூன்று வாரங்களுக்கு மேல் ஒருவருக்கு இருமல் நீடித்தால், அதில் சளியுடன் ரத்தம் வந்தால், அது காச நோயின் அறிகுறியாக இருக்கலாம். காசநோயால் பாதிக்கப்பட்டோருடன் பழகுவதால் இத்தொற்று ஏற்படும். 

இது காற்றின் மூலம் பரவுவதால், பாதிக்கப்பட்டவர்கள் இருமினால், அருகில் இருப்பவர்களுக்கு பரவும். எனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வைத்து தான் சிகிச்சை அளிப்பார்கள். உடல் சோர்வு, இரவு நேரத்தில் வியர்த்தல், பசியின்மை, எடை இழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

medical

இந்நோய்த்தொற்று உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவினால், உடலில் வலி மற்றும் வீக்கம், மலச்சிக்கல், தலைவலி ஆகிய அறிகுறிகள் தென்படும். எனவே நல்ல காற்றோட்டமுள்ள சூழல் இருக்க வேண்டும். தும்மும்போதும், இருமும்போதும் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ள வேண்டும்.