96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
புகைப்பிடிப்பவரா நீங்கள்.? அப்போ கண்டிப்பா "முலாம் பழம்" சாப்பிட வேண்டும்.!
முலாம் பழத்திற்கு மற்றொரு பெயர் கிர்ணி பழம் ஆகும். முலாம்பழத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் புகைப்பிடிப்பவர்களுக்கு இந்தப் பழம் சிறந்த பயன்களைத் தருகிறது, என்று ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. அது என்னவென்று கீழே பார்ப்போம்.
முலாம்பழம் என்று சொல்லக்கூடிய கிர்ணி பழம் இதயம் மற்றும் நுரையீரலை வலுப்படுத்த உதவுகிறது. இதில் அடினோஸின் என்ற வேதிப்பொருள் இயற்கையாகவே உள்ளதால் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. முலாம் பழத்தின் விதைகளைக் காய வைத்து சாப்பிட்டால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.
இந்த முலாம்பழத்தை குறிப்பாக ஏன் புகைபிடிப்பவர்கள் அதிகம் சாப்பிட வேண்டும்? ஏனென்றால், நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்திகரிக்கும் தன்மைக் கொண்டது, மற்றும் நுரையீரல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது இந்த முலாம்பழம். மேலும் இதில் கரோட்டின் இருப்பதால் கண்புரை ஏற்படாமல் தடுக்கிறது.
முலாம் பழம் ஜுஸ் செய்து குடித்தால் அல்சரைக் குணப்படுத்துகிறது. இது மன அழுத்தம் குறைக்கவும், தூக்கமின்மையை சரிசெய்யவும் உதவுகிறது. இந்த பழத்தை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்ளும்போது இதில் உள்ள "போலேட்" கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
முலாம் பழத்தில் கொலாஜின் என்ற புரதக் கலவை உள்ளதால் சரும திசுக்களை பாதுகாக்கிறது மற்றும் சருமத்தில் உள்ள காயங்களை விரைவில் ஆற்றுகிறது. சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள் இந்த பழத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சர்க்கரை அளவு அதிகம் இருப்பவர்கள் தவிர்க்கவேண்டும். மேலும் சிறுநீரகத்தில் உள்ள புண்களையும் ஆற்றும் தன்மைக் கொண்டது. முலாம்பழம் இத்தனை சிறப்புகளைக் கொண்ட பழம் என்பதால் தான், புகை பிடிப்பவர்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.