"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
ஆஹா என்னா சுவை!! முருங்கை கீரையை இப்படி ஒரு முறை சமைத்து சாப்பிட்டு பாருங்கள்...
பருப்பு சேர்த்து ஒரு முறை முருங்கை கீரையை சமைத்து சாப்பிட்டு பாருங்கள் வீடோ மண மணக்கும்.
தேவையான பொருட்கள்:
வெங்காயம் -2
தக்காளி -3
பச்சை மிளகாய் -6
முருங்கைக்கீரை -1 கப்
பூண்டு -8
மஞ்சள்தூள்-1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு
முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பருப்பு,பச்சை மிளகாய், மஞ்சள் தூள், முருங்கை கீரை ஆகியவற்றுடன் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் நன்கு வேக வைத்து கொள்ளவும். கீரை நன்கு வெந்ததும் இறக்கி ஆறவைத்து கொள்ளவும்.
அதனுடன் புளி சேர்த்து ஒரு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக இருக்குமாறு அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு பத்திரத்தில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, பூண்டு 2 சேர்த்து தாளித்து கீரையுடன் சேர்த்து கிளறி விடவும். அவ்வளவு தான் அருமையான கீரை கூட்டு ரெடி.