நாவூரும் சுவையில், நயன்தாராவின் ஃபேவரைட் ஜப்பான் சிக்கன்.! 3 ஸ்டெப் ரெஸிபி.!



nayanthara-favourite-japan-chicken-receipe

நயன்தாரா தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர். அவர் தேர்ந்தெடுக்கும் படங்களின் கதைக்களமும், அதில் அவருடைய கதாபாத்திரமும் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். அதேபோல் உணவிலும் அவரது தேர்வு தனித்துவமாகவே இருக்கிறது. அவரது கணவர் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியில், நயன்தாராவிற்கு மிகவும் பிடித்தது, ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஜப்பான் சிக்கன் என்றார். அதிக காரமில்லாமலும், கிரீமியாகவும் இருக்கும் இந்த ஜப்பான் சிக்கனை உங்கள் வீட்டினரும் விரும்புவர்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் எலும்பு நீக்கியது - 500 கிராம்
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - ஐந்து கீறியது
பால் - 2 கப்
முந்திரி பவுடர் - 1/4 கப்
சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெள்ளை மிளகு - 1 தேக்கரண்டி
மைதா - 2 தேக்கரண்டி
சோள மாவு (Corn flour) - தேக்கரண்டி
எண்ணெய் பொறிப்பதற்கு - தேவையான அளவு.

Japan chicken

செய்முறை: 
 
1. பொரித்த சிக்கன்: 

முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை போட்டு அதில் உப்பு வெள்ளை மிளகு சோள மாவு மைதா ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். சிறிது நீர் தெளித்து சிக்கனில் மாவு நன்றாக ஒட்டும் படி கலக்கவும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி கலந்து வைத்த சிக்கனை சிறிது சிறிதாக பொன்னிறமாக பொறிக்கவும். பொறிப்பதற்கு ஐந்து முதல் ஆறு நிமிடங்களுக்கு மேல் எடுக்க வேண்டாம். சிக்கனை அதிக நேரம் பொறித்தால் மிருதுவாக இருக்காது. பொறித்த சிக்கனை எண்ணெய் வடிவதற்காக ஒரு பேப்பர் டவலில் வைக்கவும்.

2. ஜப்பான் சிக்கன் சாஸ்:

ஒரு வாணலியில் வெண்ணையை சூடாக்கி, அதில் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பின்பு பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் பாலை ஊற்றி, தூளாக்கிய முந்திரி, சர்க்கரை மிளகு உப்பு இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 

Japan chicken

 3. ஜப்பான் சிக்கன்:

பொறித்து வைத்த சிக்கனை, மேலே கூறிய சாஸ் உடன் கலந்து 3 முதல் நான்கு நிமிடம் வதக்கவும். விருப்பப்பட்டால் இத்துடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கொள்ளலாம். இதனை சூடாக பரிமாறவும்.