8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பச்சைப்பயிறு தோசை.. இன்றே செய்து அசத்துங்கள்..!!
உடல் எடையை குறைப்பதற்கு பச்சைப்பயிறு உதவுகிறது. மேலும், பச்சைப் பயிரினை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியமும் மேம்படும்.
தேவையான பொருட்கள் :
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 3
பச்சை பயிறு - 1 கப்
தோல் சீவியை இஞ்சி துருவல் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப்
செய்முறை :
★முதலில் பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
★பின் பச்சைப்பயிறுடன், கடலைப்பருப்பு சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்தவற்றை மறுநாள் களைந்து, தண்ணீர் வடிகட்டி மிக்ஸியில் நைசாக அரைக்க வேண்டும்.
★அடுத்து வெங்காயம், இஞ்சி மற்றும் கொத்தமல்லி, மிளகாயை விழுதாக அரைத்து எடுக்க வேண்டும்.
★பச்சைபயிறு மாவுடன் இந்த அரைத்து விழுதை சேர்த்து அரிசி மாவு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்க வேண்டும்.
★இறுதியாக தோசைகல் காய்ந்தபின், மாவை தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுத்தால் பச்சைபயறு தோசை தயாராகிவிடும்.