தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
குழந்தைகளுக்கு கட்டாயம் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?.!
குழந்தை பராமரிப்பு விஷயத்தில் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. பெற்றோர் தங்களது குழந்தையுடன் நேரத்தை செலவிட வேண்டும். அவர்களுடன் அமர்ந்து பேசுதல், விளையாடுதல் போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, குழந்தைகள் சொல்ல வருவதையும் காது கொடுத்து கேட்க வேண்டும். இன்றளவில் எப்போதும் பெற்றோர்கள் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு இருப்பதால், அவர்கள் பெற்றோர்களுடன் நட்பு ரீதியாக பழகாமல், தனக்கு கிடைக்கும் நட்பு வட்டாரத்தை வைத்து தங்களது வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
இது பின் நாட்களில் புகைப்பழக்கம், மது பழக்கம் போன்றவற்றுக்கு அடிமையாகவும் முதல் காரணமாக அமைந்துவிடுகிறது. அதேபோல, மனதில் உள்ள பிரச்சனையும் வெளியில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தையின் பாதுகாப்புக்கு முதல் பொறுப்பாக இருக்கின்றனர். அவர்களின் ஆளுமை, வளர்ச்சி, குடும்ப சூழல், மகிழ்ச்சி, அன்பு, புரிதல் போன்றவற்றுக்கு பெற்றோர்கள் நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ தொடுதல் தொடர்பான விழிப்புணர்வை அவர்களுக்கு முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும். சிறுவயதிலிருந்து அதனை கற்றுக் கொடுக்கவும் வேண்டும். மேலாடை இன்றி, ஆடையின்றி குழந்தைகள் நமக்கு குழந்தையாக தெரிந்தாலும் பார்க்கும் எல்லோருக்கும் அப்படி இருக்காது.
இதனால் குழந்தைகள் ஆடை இன்றி இருக்கக் கூடாது என சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போதும், வீட்டின் வெளியே நிற்க வைக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். இது கேடான எண்ணம் கொண்ட மனிதர்களை தவிர்த்து, சில நேரம் விலங்குகளால் ஏற்படும் தீங்கையும் குறைக்க உதவி செய்யும்.
இலவசமாக வழங்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடக்கூடாது என்ற அறிவுறுத்தலையும் கூற வேண்டும். பள்ளிகளுக்கு வாகனத்தில் தனியாக அனுப்புதல் அல்லது பிற குழந்தைகளுடன் அனுப்புதல் என எப்படி இருந்தாலும் வாகன ஓட்டுனரின் விபரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது பாதுகாப்புக்கு தானே உறுதி என்ற விஷயத்தை குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்து அடிப்படையாக சொல்லிக் கொடுக்க வேண்டும். எப்போதும் ஒருவரின் மீது அளவு கடந்த நம்பிக்கை காட்டுவது அல்லது வெறுப்பை காட்டுவது போன்றவை கூடாது. யார் மனதையும் புண்படுத்தும் படி நடக்க கூடாது என்பதையும் புரிந்துகொள்ள வைக்க வேண்டும்.
நியாயமான முறையில் தனது தேவையை பூர்த்தி செய்து உடல் ஆற்றல் மற்றும் மன ஆற்றலை பக்குவப்படுத்தும் விதமாக ஒவ்வொரு முயற்சிக்கும் பாராட்டுதல் தெரிவித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.