கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஆஹா என்ன ஒரு சுவை: உருளைக்கிழங்கு வறுவலை ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்...
பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிட கூடிய காய்கறிகளுள் ஒன்று உருளைக்கிழங்கு. இதனை எப்படி செய்து சாப்பிட்டாலும் அதன் சுவை வேறு லெவலாக இருக்கும். அப்படியான சுவை மிக்க உருளைக்கிழங்கை ஒரு முறை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு- 2
கடுகு, சீரகம்- 1/2 டீஸ்பூன்
வெங்காயம்- 1
தக்காளி- 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
முதலில் உருளைக்கிழங்கை பாதியளவு வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாய் வைத்து முதலில் உருளைக்கிழங்கை மட்டும் தனியாக வதக்கி எடுத்து கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்ததும் அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
பச்சை வாசனை போன பின்னர் மசாலா பொருட்களை சேர்த்து கிளறி விடவும், சிறிதளவு தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.இதனுடன் கடைசியாக உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டவும், தண்ணீர் நன்றாக குறைந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கினால் உருளைக்கிழங்கு வறுவல் தயார்.