தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகாலையில் படபடப்பு, கை கால் நடுக்கம் இருக்கிறதா? அதனை சரி செய்வது எப்படி?
தற்போது மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்சமயம் சிறியவர்களும் மது அருந்தி எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர். மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல பெண்கள் கணவனை இழந்து விதவையாக வாழும் சூழ்நிலை இருந்து வருகிறது. பல குழந்தைகள் சிறு வயதிலேயே தந்தையை இழந்து தவித்து வருகின்றனர்.
மதுப்பழக்கம் ஆரம்பத்தில், மகிழ்ச்சியை அளிப்பது போலத்தான் இருக்கும். ஆனால் நாளடைவில் அவர்களது உடலில் உள்ள உறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படைந்து உயிரைப் பறிக்கும் சூழ்நிலைக்கு கொண்டு செல்லும். தற்போதைய வாழ்க்கைமுறையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பலருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். மதுபழக்கம் உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாது. ஆனால் நாளடைவில் கல்லீரல், சிறுநீரகம், கணையம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிப்படையும்.
தொடர்ந்து மது அருந்துபவர்களுக்கு அதிகாலையில் நடுக்கம், படபடப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும். அந்த சமயத்திலும் அவர்கள் தொடர்ந்து மதுபழக்கத்தை கடைபிடித்தால் அவர்களுக்கு மரணம் நிச்சயம். எனவே மதுபழக்கத்தை விட்டுட்டு, காலையில் இளநீர், மதிய உணவில் மணத்தக்காளி கீரை, கொய்யாப்பழம், பப்பாளி பழம் போன்றவற்றை உட்கொண்டு மதுவினால் பாதிப்படைந்த குடலை தேற்றி நலமுடன் வாழ முயற்சி செய்யுங்கள். மதுபழக்கத்தை ஆரம்பத்திலே விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால் மது மனிதனை அடிமையாக்கி மனிதனின் உயிரை குடிக்கும்.