பற்கள், எலும்புகளுக்கு உறுதியளிக்கும் சுவையான கேழ்வரகு மில்க்ஷேக்...!



ragi milk shake recipe for health

கேழ்வரகில் கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், இந்த தானியத்தில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது. அத்துடன் நிறைவுறாக் கொழுப்பு என்று அழைக்கப்படும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் இருக்கிறது. வாரம் ஒருமுறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக பற்கள் மற்றும் எலும்புகளுக்கு உறுதியளிக்கும். இத்தகைய பலவிதமான சத்துக்கள் அடங்கிய கேழ்வரகு மில்க்ஷேக் குறித்து விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.

தேவையான பொருட்கள் :

ஏலப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - சுவைக்கேற்ப
பேரிச்சை - 5
கேழ்விரகு - 50 கிராம்
ஊறவைத்த பாதாம் முந்திரி திராட்சை - 4
காய்ச்சிய பால் - 200 மி.கி

ragiசெய்முறை :

★முதலில் நாம் கேழ்வரகு மில்க்க்ஷேக் செய்வதற்கு, முதல் நாள் இரவே கேழ்வரகை ஊற வைக்க வேண்டும். பின் அதன் சக்கையை சிறிது நீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

★அடுத்து முன்பே ஊறவைத்த தோல் நீக்கிய பாதாம், முந்திரி மற்றும் திராட்சை, பேரீச்சை ஆகியவற்றை பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

★பின் கேழ்வரகையும், பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.

★காய்ச்சிய பின், அதனுடன் அரைத்த பாதாம் விழுது மற்றும் மீதமுள்ள பால் ஏலப்பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் காய்ச்சி இறக்கினால் சத்தான கேழ்வரகு மில்க் ஷேக் ரெடி.