தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#HealthTips: மழைக்கால நோய்தொற்றில் இருந்து உடலை பாதுகாக்கும் இயற்கை மூலிகை சாறு வீட்டிலேயே செய்வது எப்படி??.!
மழைக்காலம் என்றாலே குளுகுளு சூழ்நிலைக்கும், இனம்புரியாத கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. ஆனால், இவ்வாறான நாட்களில் பருவகால நோய்களும் நம்மை பாதிக்கும்.
குறிப்பாக மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல் போன்றவற்றை தடுத்து, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இன்று இயற்கை மூலிகை செய்யும் முறை குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள்:
தூதுவளை - 10,
பூண்டு - 5 பற்கள்,
இஞ்சி விழுது- ஒரு கரண்டி,
கறிவேப்பில்லை, கொத்தமல்லி, புதினா - கைப்பிடியளவு,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப,
துளசி இலை - சிறிதளவு,
எலுமிச்சை சாறு - 2,
வெங்காயம் - 10
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட தூதுவளை இலை, பூண்டு, இஞ்சி, கறிவேப்பில்லை, கொத்தமல்லி, புதினா, துளசி இலை, வெங்காயம் போன்றவற்றை மிதமான தீயில் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இந்த கஷாயம் நன்கு கொதித்து வந்ததும், அதனை வடிகட்டி இறக்கி மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால் சுவையான மற்றும் உடலுக்கு மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை வழங்கும் கஷாயம் தயார்.