கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
ரமலான் ஸ்பெஷல்.. நோன்புக்கு சுவையான மட்டன் கஞ்சி செய்வது எப்படி?..! இன்றே செய்து அசத்துங்கள்..!!

நோன்புக்கு பெயர்போன ரமலான் நோன்பு ஸ்பெஷலான மட்டன் கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்து இன்று காணலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 2 கிண்ணம்
சிறுபருப்பு வறுத்தது - 1 கிண்ணம் எலும்பு இல்லாத மட்டன் - 1/2 கிலோ பெரிய வெங்காயம் நறுக்கியது - 3 கேரட் நறுக்கியது - 4
உருளைக்கிழங்கு நறுக்கியது - 2 பட்டாணி - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - தேவையான அளவு
மசாலா தூள், மிளகாய் தூள், - தேவையான அளவு
தக்காளி - 4
இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை :
★முதலில் எடுத்துக்கொண்ட அரிசியை சிறிதுநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
★பின் குக்கரில் மட்டன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, பட்டாணி, உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
★அரிசி பருப்பு சேர்த்து மீண்டும் தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
★இவை நன்கு வெந்ததும் ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
★இறுதியாக வாணலியில் நெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அதனோடு தேங்காய்பால் விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசி கலவையை சேர்த்து இறக்கினால் சுவையான மட்டன் கஞ்சி தயார்.