"குளிருக்கு இதமாக காரசாரமான பெப்பர் இட்லி ட்ரை பண்ணலாம் வாங்க!"



Recipe for pepper idly fry

பொதுவாக தமிழர்களின் அன்றாட காலை உணவு இட்லி, தோசை, பொங்கல், வடை, பூரி இவையாகத் தான் இருக்கும். அதிலும் குறிப்பாக இட்லி தான் எல்லோருக்கும் எளிதாக செய்யவும், மேலும் செரிமானத்திற்கும் ஏற்றதாக இருக்கும். 

idly

மேலும் சிறு குழந்தைகள் முதல் காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு உணவு என்றால் அது இட்லி தான். ஏனெனில் இட்லி எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு. ஆனால் தினமும் ஒரே மாதிரி இட்லி சாப்பிட்டு போர் அடிக்குதா?

அப்போ இந்த குளிருக்கு ஏற்ற காரசாரமான பெப்பர் இட்லியை செய்து பார்ப்போம் வாங்க. முதலில் இட்லியை வேகவைத்து பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவேண்டும். மேலும் வெங்காயம், பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவேண்டும். 

idly

கடாயில் எண்ணெய் விட்டு இட்லிகளை லேசாகப் பிரட்டி, தனியே எடுத்துக்கொண்டு, அந்த எண்ணையில் கடுகு உளுந்து தாளித்து, வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி இட்லித்துண்டுகளை போட்டு உப்பு சேர்த்து பின்னர் இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கினால், பெப்பர் இட்லி தயார்.