மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பப்பாளி இலையில் உள்ள ரகசியம் தெரியுமா.?! தெரிஞ்சா அசந்துடுவிங்க.!
பப்பாளி இலையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ , வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் நிறைய மருத்துவப் பயன்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. பப்பாளி இலையில் நம் உடலுக்கு தேவையான ஆக்சிஜனேற்ற கலவைகள் நிறைந்துள்ளன.
பப்பாளி பழத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். அதேபோல் தான் பப்பாளி இலையிலும் கூடுதலாக இரும்பு சத்து, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இந்த பப்பாளி இலையின் சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.
டெங்கு காய்ச்சலுக்கு ஒரு அருமருந்தாக அமைகிறது இந்த பப்பாளி இலை. இது நம் உடலில் உள்ள இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். மேலும் இந்தப் பப்பாளி இலைச் சாற்றில் பிளேட்லெட் அளவை அதிகரிக்கச் செய்யும் திறன் உள்ளது என்று மருத்துவ ஆராய்ச்சி கூறியுள்ளது.டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிபடுவோர்க்கு இந்த பப்பாளி இலைச் சாறு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
பப்பாளி இலையில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் நம் உடலில் உள்ள நச்சுத்தன்மையை அழித்து வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து மற்றும் உடல் எடையைக் குறைக்க பெரிதும் வழிவகுக்கின்றது. மேலும் பப்பாளி இலையை அரைத்து சாறு எடுத்து அதை முகத்தில் தடவி வர சரும வறட்சியைப் போக்கி முகம் பொலிவாகத் தோன்ற உதவும். இது பெண்களின் மாதவிடாய் காலத்தில் இரத்தத்தை சீராக வெளியேற்ற உதவுவதோடு மட்டுமல்லாமல் கருப்பைச் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது.