மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீங்க டீ லவ்வரா.? தினமும் டீ குடிப்பதனால் என்ன ஆகும் தெரியுமா.?
நவீன காலகட்டத்தில் காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிப்பது என்பது அன்றாட செயலாகவே மாறிவிட்டது. ஒரு சிலர் டீ, காபி குடிப்பதில் அடிமையாகவே மாறிவிடுகின்றனர்.
மேலும் உலகில் அதிகமானவர்களால் குடிக்கப்படும் பானம் என்பது டீ தான். டீயில் பல வகைகள் இருந்து வருகின்றன. சுக்கு டீ, கருப்பு டீ, கிரீன் டீ, பால் டீ போன்ற பலருக்கும் பிடித்தமான சுவைகளில் டீ தயாரிக்கப்படுகிறது.
காலையில் எழுந்தவுடன் டீ அருந்துவதால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது என்று நாம் கருதி வருகிறோம். ஆனால் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் நெஞ்செரிச்சல், வயிற்றில் புண் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
வெயில் காலத்தில் அதிகப்படியான டீ அருந்துவதால் உடலில் நீர் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இரண்டுக்கும் மேற்பட்ட டீ குடிப்பதினால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் உருவாகிறது.