மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Yummy... நார்த் இந்தியன் ஸ்டைல் பட்டர் காளான் மசாலா.!! சிம்பிள் ரெசிபி.!!
இரவு நேரத்தில் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா.? அதிலும் சற்று க்ரீமியாக கிரேவி செய்ய விரும்புகிறீர்களா.? முக்கியமாக இந்த காளான் பட்டர் மசாலா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இப்போது காளான் பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று காண்போம். இதை வீட்டில் செய்வதை காட்டிலும் பலரும் ஹோட்டலில் வாங்குவதையே வழக்கமாக வைத்துள்ளனர். கடையில் வாங்கி சாப்பிடுவதை விடவும் வீட்டிலேயே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
தேவையான பொருட்கள்: 1 பாக்கெட் காளான், 2 பெரிய வெங்காயம், 2 தக்காளி, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் சீரகத்தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள், 1 டீஸ்பூன் பூண்டு விழுது, 2 டேபிள் ஸ்பூன் பட்டர், 1/4 கப் ஃப்ரெஷ் க்ரீம், 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி, கொத்தமல்லி சிறிதளவு, உப்பு தேவையான அளவு
செய்முறை: முதலில் காளானை நன்கு கழுவி நான்கு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள வெங்காய, தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். இதன் பச்சை வாசம் போனதும் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின் காளான் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும். இது கொதித்து தண்ணீர் சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் கடைசியாக ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக விட்டு கஸ்தூரி மேத்தி, மல்லி இலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் பட்டர் மசாலா தயார். இந்த கறி பிரியாணி, கீ ரைஸ், சப்பாத்தி, ரொட்டி, நாண் போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.