இயக்குனர் பாரதிராஜா மகன் தாஜ்மஹால் நாயகன் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
அழகையும், ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும்.. பழைய சோறு.. டீ, காபியை ஓரம்கட்டுங்க.!

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தினமும் காலை டீ, காபி குடிக்கவில்லை. காலையில் எழுந்ததும் பல் தேய்த்து விட்டு நீச்ச தண்ணீர் தான் குடித்தார்கள். அதுமட்டுமல்ல, காலை உணவாக பழைய சாதம் சாப்பிட்டார்கள். ஆகையால் தான் வலிமையாகவும், சுறு சுறுப்பாகவும் இருந்தார்கள்.
பழைய சாதத்தில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், அமெரிக்கா ஆய்வில் உலகிலேயே மிகவும் ஆரோக்கியமான காலை உணவு பழைய சோறு தான் என்று தெரிவித்துள்ளனர்.
பழைய சாதம் உடலுக்கு குளிர்ச்சி தரும். மேலும், வயிற்றில் அமிலத்தன்மை உருவாவது மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.
இதையும் படிங்க: மக்கானா ஆரோக்கியமானது மட்டுமல்ல.. ஆபத்தானதும் கூட.. உஷார்.!
பழைய சாதம் மற்றும் நீச்ச தண்ணீர் குடிப்பதனால் வயிற்றுப் புண் அதாவது அல்சர் குணமாகும். மேலும், பழைய சாதம் மற்றும் நீச்ச தண்ணீர் குடிப்பதனால் சருமத்தில்இயற்க்கையாக கொலாஜன் உற்பத்தியாகி சருமம் ஈரப்பதமாகவும், பொலிவாகவும் இருக்கும்.
அதுமட்டுமல்லாமல், தலை முடி பொலிவாகவும், உறுதியாகவும் இருப்பதற்கு பழைய சாதம் மற்றும் நீச்ச தண்ணீர் பெரிதும் உதவுகிறது. பழைய சாதம் சாப்பிடுவதற்கு முன் சர்க்கரை நோயாளிகள் மட்டும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
இதையும் படிங்க: மக்கானா ஆரோக்கியமானது மட்டுமல்ல.. ஆபத்தானதும் கூட.. உஷார்.!