தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
நாக்கில் எச்சில் ஊற வைக்கும் காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி செய்வது எப்படி.?
வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே வெறும் பத்து நிமிடத்தில் காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் - 10
பூண்டு பல் - 3
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு.
ஒரு மிக்ஸியில் மேலே குறிப்பிட்ட மிளகாய், பூண்டு பல், புளி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் கிளறி விட்டு அடுப்பை ஆப் செய்யவும்.
அவ்வளவு தான் சுவையான காரசாரமான மிளகாய் சட்னி தயார். இவற்றை இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து பரிமாறலாம்.