மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இழந்த சக்தியை மீட்டுத் தரும் அரைக்கீரை.! பிரசவத்திற்கு பின் கட்டாயம் சாப்பிடுங்கள்.!
நம் உடலில் ஏதேனும் அறுவைசிகிச்சை மற்றும் தீராத நோய்யிலிருந்து குணமாகி வந்த பிறகு இந்த அரைக்கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் இழந்த உடல் பலத்தை மீண்டும் பெறலாம். சாதாரண காய்ச்சல் அடித்து சரியான பின்னரும் இந்தக் கீரையை முறையான பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டால் விரைவில் குணமாகி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இது நம் மனதிற்கு ஒரு விதமான தெம்பை ஏற்படுத்தும்.
அரைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர்கற்கள் கரையும். இந்தக் கீரையை கூட்டு, பொரியல், குழம்பு போன்ற விதங்களில் பக்குவமாக சமைத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படும் ஆரம்பக் கட்டத்தை குறைக்கிறது. மலச்சிக்கலை போக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.
பெண்கள் இந்த கீரையை வாரத்தில் மூன்று முறை எடுத்துக் கொண்டால் கருப்பை பலம் பெறும். இதன் மூலம் விரைவில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். ஆண்கள் இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால் ஆண்மை நீங்கும். கணவன்-மனைவி கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்ளவதன் மூலம் அவர்களின் தாம்பத்திய உறவில் அதிக இன்பம் பெறலாம்.
இந்த கீரையை நெய்யில் வறுத்து வெங்காயம் சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் இரத்தத்தில் புதிய தாது அணுக்களை அதிகச் செய்கிறது. மேலும் உடல் எடையைக் குறைந்து மெலிதான தோற்றம் உள்ளவர்கள் தினமும் அரைக்கீரையை நெய்யில் சேர்த்து எடுத்துக் கொண்டால் உடல் எடை அதிகரித்து, உடல் பலம் பெறும்.
முக்கியமாக பெண்கள் தனது பிரசவத்திற்கு பிறகு உடல் பலத்தை இழந்து சோர்வுடன் இருப்பார்கள். அப்போது இந்த கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு பழைய தெம்பைக் குடுத்து, பால் சுரப்பை அதிகப்படுத்தும்.
பொதுவாக எல்லாவகை கீரையிலும் இரும்புசத்து இருந்தாலும், இந்த அரைக்கீரையில் உள்ள இரும்புச்சத்து கண் பார்வை மங்கல், கண் குத்தல் போன்ற முக்கியமான கண் கோளாறுகளை சரி செய்கிறது. ஆகவே வாரத்தில் 2-3 நாட்கள் கட்டாயம் அரைக்கீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.