96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கர்ப்பிணிகளும், சர்க்கரை நோயாளிகளும் முளைக்கட்டிய தானியங்களை சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா.?!
இரவு நேரத்தில் தானிய வகைகளை நீரில் ஊற வைத்து அதை காலையில் எடுத்து ஒரு நூல் துணியில் முடிந்து பின் 8 மணி நேரம் கழித்து அதை பிரித்து பார்க்கும்போது அதில் உள்ள தானிய பயிர்கள் முளைவிட்டு இருக்கும். இந்த முளைவிட்டதுதான் முளைகட்டிய தானிய வகை என்று கூறுகிறோம்.
இந்த வகை முளைக்கட்டிய பயிர்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நமது உடலுக்கு அதிகப்படியான நியூட்ரிஷியன்கள் கிடைப்பதுடன் நமது நாள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். எனவே, சுகாதார நிபுணர்கள் பலரும் காலை உணவில் முளைகட்டிய தானியங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
வயதான தோற்றத்தை தடுக்கிறது :
இந்த முளைகட்டிய பயிர்களில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் விட்டமின்கள் அதிகம் இருக்கும். எனவே இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயதான தோற்றத்தை தடுக்கிறது. இதில் இரு மடங்கு ஊட்டச்சத்து இருப்பதால் அதிகப்படியான பலன்களை கொடுக்கிறது. இதனால், நாம் அதிகம் சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. எனவே இதனால் தேவையற்ற எடை அதிகரிப்பை நாம் தடுக்கலாம்.
கண் நோய்களை தீர்க்கும் :
இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக இருக்கிறது. இருப்பினும், இரும்பு சத்து, விட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. நார்ச்சத்து அதிகம் கொண்ட முளைகட்டிய தானியங்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி எளிதில் ஜீரணமாக உடலை தயார் செய்கிறது.
இதில், விட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் கண் பார்வை மேம்படும். மேலும், கண் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளையும் இது தீர்க்கிறது. இந்த தானியங்கள் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பிரச்சனையையும் தடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்றியமையாதது :
முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட வேண்டியது மிக அவசியமாகும். இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் போலிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் இதை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். இந்த தானியங்களை சாலட்டுகளாக அப்படியே சாப்பிடலாம் அல்லது வேகவைத்து சாப்பிடலாம்.