உங்க குழந்தை சீனி, இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிடுறீங்களா? பெற்றோரே உஷார்.. ஷாக் தகவல் இங்கே.!



sugar-foods-dangerous-for-children

 

உலகளவில் மக்களிடையே வயது வித்தியாசமின்றி பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில், இளவயதுள்ள சிறார்களுக்கு நீரழிவு நோய் பிரச்சனை என்பது அபரீதமாக அதிகரித்துள்ளது. இளவயது மாரடைப்பு மரணமும் நேர்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, அதிக இனிப்பு கலக்கப்பட்ட உணவை குழந்தைகள் சாப்பிடுவது, குழந்தைகள் சாப்பிட பரிந்துரைப்பது, சிறார்களின் சிறுவயது முதல் வாழ்நாள் வரை பல நோய்களுக்கு வழிவகை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ருசியான சுரைக்காய் வடை செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!

health tips

குழந்தைகளின் எதிர்காலமே பேராபத்தில்

சிறார்களுக்கு தொடர்ந்து இனிப்பு வழங்கினால் உடல் பருமன், இளவயது ரத்த அழுத்தம், டைப்-2 சர்க்கரை பிரச்சனையை உண்டாக்கும். அமெரிக்காவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக 17 தே.கரண்டி சர்க்கரையை தினமும் உட்கொள்கிறது. 

இவரது விசயம் சிறுமிகளுக்கு விரைந்த பருவம், நீரிழிவு நோயின் இரண்டாம் கட்ட அபாயம் போன்றவற்றை அதிகரிக்காது. கல்லீரல் செயல்பாடுகளையும் பாதித்து, மூளையின் செயல்பாட்டுக்கு கேடு உண்டாகிறது. இதனால் அறிவாற்றலும் குறைகிறது. 

health tips

பொதுவாகவே சீனி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பழச்சாறுகள் போன்றவற்றை குறைத்துக்கொண்டு, உடல் நலனுக்கு தேவையானதை தேர்வு செய்து சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்களும் பரிந்துரை செய்கின்றனர். 
 

இதையும் படிங்க: உடலுக்கு நன்மை தரும் இட்லி பொடி; முருங்கைப்பொடி செய்வது எப்படி?