மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சம்மர் ஸ்பெஷல் ஜில்லென்ற ஆரஞ்சு ஐஸ்கிரீம்.! வீட்டிலேயே செய்வது எப்படி.?
வரும் கோடை வெயிலில் குளுகுளுனு சாப்பிட சூப்பரான ஆரஞ்சு ஐஸ்கிரீம் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க. ஆரஞ்சு பழத்தை கொண்டு செய்யப்படும் சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் எப்டி செய்யாலாமனு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
3 ஆரஞ்சு, 1 டீஸ்பூன் ஆரஞ்சு கலர், 250 மிலி பால், 2 டீஸ்பூன் சோள மாவு, 1/4 கப் சர்க்கரை, 1 கப் ஃப்ரெஷ் க்ரீம், 1 டீஸ்பூன் ஆரஞ்சு எசன்ஸ்
செய்முறை: முதலில் ஃப்ரெஷ் பழத்தை தோல் நீக்கி விட்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்து அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து பால், சர்க்கரை மற்றும் கார்ன் ப்ளார் மாவை சேர்த்து கைவிடாமல் சிறிது கெட்டியாகும் வரை கலந்து அடுப்பை அணைத்து விடவும். இவை ஆறியதும் இதனுடன் ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும். பின் ஒரு பவுளில் ஃப்ரெஷ் கீரீம் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும். நல்ல கீரிமீயான பதம் வரும் வரை நன்கு பீட் செய்யவும்.
பின் அதில் ஆரஞ்சு கலர், ஆரஞ்சு எசன்ஸ் மற்றும் கலந்து வைத்துள்ள பால் சேர்த்து மற்றொரு முறை நன்கு பீட் செய்துக் கொள்ளவும். இப்பொழுது நாம் ரெடி செய்து வைத்துள்ள ஐஸ்கிரீமை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஒரு பேப்பரால் மூடி பிரிட்ஜில் 4 முதல் 5 மணி நேரம் வைத்து விடுங்கள். பின் அதனை வெளியே எடுத்து பரிமாறவும் போது நறுக்கிய பாதாம், முந்திரி, குங்குமப் பூ சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ஆரஞ்சு ஐஸ்கிரீம் தயார்.