மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண்களே.! இந்த அறிகுறிகள் இருந்தால் புற்று நோய்க்கான பாதிப்பாக கூட இருக்கலாம்.? எச்சரிக்கை.!?
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் நோய் பாதிப்புகள் பலவிதமாக பெருகி வருகின்றன. இதில் புற்றுநோய் என்பது அதிகமாக மக்களிடையே பெருகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. பல வகையான புற்று நோய்கள் இருந்தாலும் ஆண்கள் அதிகமாக பாதிக்கப்படும் புற்றுநோய் விதைப்பை புற்றுநோய் தான். 15 - 35 வயதுடைய ஆண்களுக்கு அதிகமாக இந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதை டெஸ்டிகுலர் புற்றுநோய் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. விதைப்பை புற்று நோய் என்பது விதைப்பைக்குள் வளரும் கட்டியாகும். இந்த விதைப்பை புற்றுநோய் அரிதான புற்றுநோய் வகையை சார்ந்தது என்றாலும், இது விந்தணுக்களின் செல்களில் உருவாகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் இந்த கட்டிகளை எளிதில் நீக்கிவிடலாம். விதைப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்?
விதைப்பை புற்றுநோயின் முதன்மையான அறிகுறியாக கருதப்பட்டு வருவது, விதைப்பை சற்று கட்டியாகவோ அல்லது விதைப்பையில் ஏதேனும் கட்டிப் போன்றோ இருந்தால் உடனடியாக தாமதிக்காமல் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். விதைப்பையில் வலி அல்லது அசவுகரியம் போன்ற உணர்வு ஏற்படும். அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதியில் லேசான வலி உணர்வு ஏற்படும்.
மேலும் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், மார்பகப் பகுதியில் திடீர் வளர்ச்சி, விதைப்பையில் திரவம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் டெஸ்டிகுலர் புற்றுநோயின் அறிகுறியாக கருதப்பட்டு வருகிறது. இந்த புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட வயதிற்கு மேல் தங்களது விதைப்பையில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா என்று அவ்வப்போது மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொள்வது உடல் நலத்திற்கு நன்மையை ஏற்படுத்தும்.