மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடலில் உள்ள கொழுப்பு ஒரே வாரத்தில் குறைய பப்பாளி மற்றும் அன்னாசி பழத்தை இப்படி சாப்பிட்டு பாருங்க.!?
பொதுவாக தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது. தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் அதிகப்படியான கொழுப்புகளை உருவாக்குகிறது. மேலும் உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை நம் உடலில் பல வகையான நோய்களை உருவாக்குகிறது.
உடல் எடையை நம் உண்ணும் உணவுகளாலும், சரியான உடற்பயிற்சியினாலும் எளிதாக குறைக்கலாம். ஆனால் ஒரு சில நோயின் காரணமாக உடல் எடை அதிகமானால் அதனை குறைப்பது மிகவும் கடினம். இத்தகையவர்கள் உடல் எடை குறைப்பதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர். ஆனால் இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
மேலும் ஒரு சில பழங்களை நம் உணவு பட்டியலில் சேர்த்துக் கொண்டால் இது உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். குறிப்பாக பப்பாளி மற்றும் அன்னாசி பழம் நம் உடலில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிப்பது, ரத்தத்தை சுத்தப்படுத்துவது, கொழுப்புகளை கரைப்பது போன்ற பல வகையான நன்மைகளை உடலுக்கு தருகிறது.
எனவே பப்பாளி மற்றும் அன்னாசி பழத்தை பழமாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்கொண்டால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் அன்னாசி மற்றும் பப்பாளி பழங்கள் கலந்த சாறை குடித்து வருவதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுவதோடு, உடலில் உள்ள கொழுப்புகள் ஒரே வாரத்தில் கரையும்.