மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்த ஒரு பொருளை பயன்படுத்தி பாருங்க.!?
கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் போன்ற மூன்று மாதங்களுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயிலில் தாக்கினால் உடலில் பலவகையான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள பலரும் பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் உடலை குளிர்ச்சியாக வைப்பதில் முக்கிய பங்கு கற்றாழை வகிக்கிறது. இந்த கற்றாழையை ஜூசாக எப்படி செய்து குடிக்கலாம் என்பதை பதிவில் காணலாம்?
தேவையான பொருட்கள்
கற்றாழை, மல்லி இலை, இந்துப்பு, இஞ்சி, தயிர்
செய்முறை
கற்றாழை செடியின் ஒரு பாகத்தை மட்டும் அறுத்து பத்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்துக் கொள்ளவும். இதன் மூலம் கற்றாழையில் உள்ள மஞ்சள் நிற நச்சு நிறைந்த திரவம் வெளியே வந்துவிடும். இதன் பின் கற்றாழையை தோல் நீக்கி உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை மட்டும் தனியாக பிரித்து ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இதனுடன் மல்லி இலை, இந்து உப்பு, சிறிய இஞ்சி துண்டு, தயிர் சிறிதளவு சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி குடித்து வந்தால் உடலில் சூடு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும் முடி உதிர்வு, சிறுநீரக கற்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாப்பதோடு, சருமத்தை பொழிவாக வைக்கவும் உதவுகிறது.