தினமும் நடைப்பயிற்சி செய்யும் நபரா நீங்கள்.? இந்த தவறுகளை மறந்தும் கூட செய்யாதீங்க.!?



Tips for Correct ways for walking

உடற்பயிற்சியின் பயன்கள்

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மாறிவரும் உணவு பழக்கங்களினாலும், வாழ்க்கை முறையினாலும் பலரும் பலவிதமான நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த வாழ்க்கை முறையில் இருந்து நம் உடலை நோய் நொடியின்றி பாதுகாக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானதாகும்.

walking

தற்போதுள்ள அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால் தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது பலருக்கும் கடினமான விஷயமாகும் என்பதால் தினமும் காலையில் நடை பயிற்சி செய்வது பலரும் பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு நடைபயிற்சி செய்யும்போது கண்டிப்பாக ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது இதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: முதுகு வலி, மூட்டு வலியை விரட்டி அடிக்கும் ராகி பால்.! எப்படி செய்யலாம்.!?

நடைபயிற்சி செய்முறை

இதய ஆரோக்கியத்திற்கும், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கும் தினமும் 10000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் நடைப்பயிற்சியின் போது நாம் அணியும் ஒரு சில காலனிகள் தசை வலி மற்றும் மூட்டு வலியை ஏற்படுத்தும் என்பதால் நம் கால்களிற்கு சரியான காலணிகள் அல்லது ஷூக்கள் அணிவது மிகவும் அவசியம்.

walking

நடை பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்

நடைப்பயிற்சி செய்யும் போது கால்களை அடி எடுத்து வைப்பது, நம் தோள்களின் தோரணை, முதுகை நேராக வைப்பது போன்றவை மிகவும் முக்கியம். நடைப்பயிற்சி என்றால் காலையில் அல்லது மாலையில் எழுந்து நடப்பது மட்டுமல்லாமல் மேலே குறிப்பிட்ட விஷயங்களையும் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நடக்கும்போது கைகளை இறுக்கமாகவோ அல்லது பக்கவாட்டிலோ வைத்திருக்கக் கூடாது. இது நம் உடலின் வேகத்தை சீர்குலைத்து உடம்பின் சமநிலையை குறைக்கும். இவ்வாறு ஒரு சில செயல் முறைகளின் மூலம் நடைப்பயிற்சியின் முழு பயனையும் அடையலாம்.

இதையும் படிங்க: தினமும் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிட்டு பாருங்க.? உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா.!?