Tips :நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல் பாதுகாக்க என்ன செய்யலாம்.!?



tips-for-how-to-prevent-fruits-colour-changing-after-cu

நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல் எவ்வாறு பாதுகாக்கலாம்?

குளிர் காலத்திலோ, வெயில் காலத்திலோ பழங்கள் எப்போதும் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தருபவையாகவே இருந்து வருகிறது. அந்த அளவிற்கு பழங்களில் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணநலன்களும் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் சில சமயங்களில் நறுக்கிய பழங்களை உடனடியாக சாப்பிடாமல் அப்படியே வைத்து விடுவோம். அப்போது பழங்கள் நிறம் மாறி கறுத்து போய்விடும். அந்த பழங்களை குப்பையில் வீசுவது பல வீடுகளிலும் நடக்கிறது. இவ்வாறு நறுக்கிய பழங்களை நிறம் மாறாமல் பாதுகாப்பது எப்படி என்பதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

Fruits

1. எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு எடுத்து நறுக்கிய பழங்களில் தடவி வைக்கலாம். இது பழத்தின் நிறத்தையும், சுவையையும் மாறாமல் வைத்திருப்பதோடு கிருமிகள் தாக்காமலும் பாதுகாக்க உதவும்.

இதையும் படிங்க: தூக்கமின்மையை சரி செய்ய மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த 5 பழங்கள் போதும்.!?

உப்பு : பல பழங்களில் ஆக்சிடேஷன் மாற்றத்தின் காரணமாக நறுக்கியவுடன் நிறம் மாறுகிறது. இதனைத் தவிர்க்க, நறுக்கிய பழங்களில் பிங்க் சால்ட்டை தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம்.
தண்ணீர் அல்லது சிறுதுளி நெய்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சிறுதுளி நெய் ஊற்றி நறுக்கிய பழங்களை நீரில் போட்டு வைத்தால் அதனை 10-15 நிமிடங்கள் வரை நிறம் மாறாமல் பாதுகாக்கலாம்.

Fruits

காற்று புகாமல் செய்வது: நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல், காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் மூடுவதன் மூலம் நிறம் மாறாமல் இருக்கும். இதில் எந்தவொரு முறையையும் பயன்படுத்தி உங்கள் பழங்களின் நிறத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் பழங்களை நறுக்கிவிட்டு நீண்ட நேரம் வைத்திருந்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நம் முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகை மலர்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா.!?