மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவில் கணவன் மனைவி சேர்ந்து இந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும்..! என்னன்னுதான் பாருங்க!
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது அவர்களுக்குள் ஏற்படும் சிறுசிறு கருத்து வேறுபாடுகள். இன்றைய நாகரீக உலகில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்று விடுவதால் அவர்களுக்குள் பேசிக் கொள்வதற்கு கூட சரியாக நேரம் கிடைப்பதில்லை.
இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை குறையும்போது கருத்து வேறுபாடு அதிகரித்து பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க பின்வரும் எளிய வழிகளை முயற்சித்து பார்க்கலாம்.
1. இரவு சமையல்
வேலைக்கு செல்லும் தம்பதிகளாக இருக்கும் பட்சத்தில் இருவரும் இணைந்து இரவு உணவை ஏற்பாடு செய்யலாம். உணவு சமைக்கும் நேரத்தில் சிறு சிறு காமெடிகள், தங்கள் அலுவலகத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்வதன் மூலம் கணவன்-மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு குறைந்து மகிழ்ச்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
2. நடைப்பயிற்சி
இரவு உணவு முடிந்த பிறகு கணவன் மனைவி இருவரும் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். இது போன்ற சமயங்களில் கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசிக் கொள்ளவும், தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை வெளியே கூறவும் இதுபோன்ற சந்தர்ப்பம் உதவுகிறது.
3. படம் பார்ப்பது
கணவன் மனைவி இருவரும் உறங்கச் செல்லுமுன் தங்கள் துணைக்கு பிடித்த அல்லது காதல் காட்சிகள் நிறைந்த படத்தினை சிறிது நேரம் பார்க்கலாம். இதுபோன்ற தருணங்கள் கணவன்-மனைவி இடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்த ஏதுவாக அமையும்.