திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மண் சட்டி வாங்கிருக்கீங்களா.? அதை சமைப்பதற்கு ஏதுவாக மாற்ற சில டிப்ஸ்.!
இன்றைய அவசர காலத்தில் வேலைகளை எளிதாக முடிக்க பல புதிய வழிகளை கையாள தொடங்கி விட்டோம். நாம் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த பொருட்களை விடுத்து, தற்போது அனைத்திலும் புதுமையை புகுத்தி விட்டோம். அப்படியாக மாறிப்போன ஒரு விஷயம் தான் மண்சட்டியில் சமைப்பது என்பது. இதில் சமைத்த உணவு ருசியிலும், ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்குவதை இந்த தலைமுறையினர் அறிந்திருந்தாலும், மண்சட்டியை சமைப்பதற்கு ஏதுவாக பழக்க தெரியாமல் அதனை கைவிடுகின்றனர்.
நீங்கள் வாங்கிய மண்சட்டி நீண்ட நாள் உடையாமல் இருக்கவும், அதனை சமைப்பதற்கு ஏதுவாக மாற்றவும் சில எளிய முறைகள் உள்ளன. முதலில் மண்சட்டியை வாங்கும் போது தரையில் வைத்தால் ஆடாத படி இருக்குமாறு பார்த்து வாங்கவும். கனமாகவும், கசிவுகள் இல்லாமலும் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
மண்சட்டியை வாங்கியவுடன், முதலில் 24 மணி நேரத்திற்கு, அந்த சட்டி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு, அந்த சட்டியை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் வெயிலில் காய வைக்கவும்.
பின்னர் அந்த சட்டியில், உள்புறமும் வெளிப்புறமும், சமையலுக்காக நீங்கள் பயன்படுத்தும் எண்ணையில் ஏதாவது ஒன்றை தடவவும். அந்த எண்ணையை சட்டி முழுமையாக உறிஞ்சியவுடன், அரிசி கலந்த நீர் அல்லது அரிசி வடித்த கஞ்சி ஊற்றி, ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விடவும். பின்னர் அந்த சட்டியை கழுவி விட்டு சமைக்க பயன்படுத்தலாம்.
மண் பானையை தேங்காய் நாரில் மட்டுமே கழுவ வேண்டும். அடுப்பில் வைக்கும் பொழுது வெறும் சட்டியை வைப்பதை தவிருங்கள். இதில் சமைத்த உணவுகள் நீண்ட நேரம் சூடாகவே இருக்கும். மண்சட்டியில் சமைக்கும் பொழுது மிதமான தீயில் சமைப்பது நல்லது. இதில் சமைக்கும் உணவு நீண்ட நேரத்திற்கு கெடாமலும் இருக்கும்.