காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
இந்த பின் ஏன் உள்ளது..? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..? இதோட பயன் என்ன தெரியுமா..?
நாம் தினமும் பயன்படுத்தும் மூன்று பின் கொண்ட ப்ளக்கில் மூன்றாவது பின் ஏன் உள்ளது என்று தெரிந்துகொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.
பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் வடிவமைக்கப்பட்டுள்ள சில விஷயங்கள் ஏன் என்றே தெரியாமல் பயன்படுத்திவருகிறோம். அதில் ஒன்றுதான் இந்த மூன்று பின் கொண்ட பிளக். ஏன் இந்தவகையான ப்ளக்கில் மூன்று பின் உள்ளது? அதிலும் ஏன் ஒரு பின் மட்டும் பெரிதாகவும் , தடிமனாகவும் உள்ளது?
3 பின் பிளக்கில் நீளமாக இருக்கும் இந்த பின்னிற்கு பெயர் கிரௌண்டிங் (grounding). இந்த பின் எர்த்திங் பாயிண்டாக செயல்படுகிறது (earthing point ). நாம் சுவிட்ச் அடாப்டரில் இந்த பிளக்கை செருகும் பொழுது இந்த தடிமனான மற்றும் நீளமான பின் தான் முதலில் போர்டை தொடும். அதன்பின்னர்தான் மற்ற பின்கள் போர்டை தொடும்.
மேலும் பிளக்கை வெளியே எடுக்கும்போது இந்த பெரிய பின்தான் கடைசியாக போர்டிலிருந்து விடுபடும். சரி இதனால் என்ன பயன் என கேட்கிறீர்களா? நீங்கள் உலோகத்தால் ஆன பின்னை முதலில் சொருகினாள் அந்த மின்சார கருவிகளில் முதலில் மின்சாரம் பாய்ந்து, உங்கள் உடல் அதனோடு தொடர்பில் இருக்குமாயின், உங்கள் உடலை ஒரு மின்கடத்தியாக பயன்படுத்தி மின்சாரம் உங்கள் உடல் வழியாக பூமியை அடையும். இதனால் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட அதிக வாய்ப்பு உள்ளது.
இதனை தடுக்கவே இந்த மூன்றாவது பின் பயன்படுகிறது. அதுசரி, ஏன் இந்த பின் மட்டும் அளவில் பெரிதாக உள்ளது? ஒருவேளை குழந்தைகள் அல்லது விவரம் தெரியாதவர்கள் மூன்றாவது பின்னை பேஸ் (base) அல்லது நியூட்ரல் (neutral) ஓட்டைகளில் எர்த் பின் -ஐ சொருகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த பின் தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளது.