#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலர் தினத்தன்று தயவு செய்து அதனை செய்யாதீர்கள்!! அடுத்த தலைமுறையை காப்பாற்றுவோம்!!
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பல பிரச்சனைகளும் நடந்துவருகிறது.
தற்போதைய வாழ்க்கை முறையில் காதலர் தினத்தன்று நடைபெறும் சம்பவங்கள், பொதுவாகவே அனைத்து மக்களையும் முகம் சுளிக்க வைக்கிறது. காதலர் தினத்தன்று காதல் ஜோடிகள் பயணிக்கும் இடமாக பூங்காவும், கடற்கரையும் இருந்து வருகிறது.
அதுபோன்ற இடங்களில், காதலர் தினத்தன்று காதலர்கள் செய்யும் சில்மிஷத்தினால், அனைத்து பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது. தயவுசெய்து ஒரு போதும் காதல் என்ற பெயரில் பொதுமக்களை கொடுமை செய்யாதீர்கள். காதல் ஜோடிகள் வேணுமென்றால் நினைத்துக் கொண்டிருக்கலாம் நாம் செல்லும் இடங்களில் தெரிந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என..
ஆனால் பெண்கள் தரப்பிலோ அல்லது தூரத்து உறவு முறையினர் யாராவது ஒருவர் பார்த்துவிட்டு, அந்தச் சம்பவம் பற்றி வெளியே கூறினால் அந்தப் பெண்ணின் அடுத்தகட்ட வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும்.
ஆனால் ஆண்கள் அவ்வாறு அல்ல அதைப் பெரிதும் கண்டுகொள்ளாமல் வேறு கல்யாணத்தை செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள்.
எனவே தயவுசெய்து இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். தற்போதைய வாழ்க்கை முறையில் காதல் என்பதை விட, கள்ள காதல் என்னும் வார்த்தை தான் தினந்தோறும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எனவே பலர் புனிதமாக கருதும் காதலர் தினத்தை, சிலரின் மாறுபட்ட கருத்தாலும் அவர்களது வாழ்க்கை முறையாலும் அந்த வார்த்தையை அசிங்க படுத்தி விடாதீர்கள்.