#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒவ்வொரு ஊரில் தயாரிக்கப்படும் பிரியாணிக்கு இப்படி ஒரு தகவலா?.. பிரியாணியும்-பெருமையும்.!
இந்தியாவில் மாறுபட்ட சுவை கொண்ட உணவுகளில், சமீபத்தில் சில ஆண்டுகளில் மிகப் பிரபலமாக பேசப்பட்டு வரும் உணவு பிரியாணி. முன்பு பிரியாணி என்றால் பண்டிகை காலங்களில் சமைத்து வழங்கப்பட்டது.
ஆனால், பிரியாணியின் மீதான சமீபத்திய பார்வை, வாரம் ஒரு முறை, தினமும் என திரும்பி இருக்கிறது. இதில் பிரியாணியின் சுவை அதன் தயாரிப்பு, உள்ளூர் நீரின் சுவை, மசாலா தயாரிக்கும் கைப்பக்குவம் போன்றவற்றுக்கு ஏற்ப மாறுபடும்.
அந்த வகையில், திண்டுக்கல் பிரியாணி காரசாரமாக சாப்பிட விரும்பும் நபர்களுக்கு சரியானதாக இருக்கும். சீரக சம்பா அரிசியில் தயாரிக்கப்படும் திண்டுக்கல் பிரியாணி காரசாரத்திற்கு பிரபலமானது.
கேரளாவில் உள்ள மலபார் பகுதியில், சீரக சம்பா அரிசியில் மனக்க தயாரிக்கப்படும் மலபார் பிரியாணி ஆகும். மசாலா பொருட்களுடன் தேங்காய் சேர்த்து சமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள செட்டிநாடு பகுதிகளில் பிரத்தியேகமாக தயார் செய்யப்படும் செட்டிநாடு பிரியாணி, நாவில் உமிழ் நீரை சுரக்க வைக்கும் ருசி மிகுந்தது. மிளகு இதன் தனித்துவமான அடையாளமாகும்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹைதராபாத் பகுதியில் தயார் செய்யப்படும் பிரியாணி, பாஸ்மதி அரிசியுடன் நறுமணம் சுண்டிகளுக்கும் வகையில் தயாரிக்கப்படும்.
ஆம்பூர் பகுதியில் தயார் செய்யப்படும் பிரியாணி, சுவைக்கு எப்போதும் தனித்துவம் ஆனது. நறுமணம் மற்றும் சுவையை நாவில் கொண்டு வருவதற்கும் இறைச்சிகளை நீண்ட நேரம் எண்ணெய் மற்றும் நறுமண மசாலா பொருட்களில் ஊற வைத்து தம் முறையில் பிரியாணி தயார் செய்யப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரமான பட்கலி பகுதிகளில் தயாரிக்கப்படும் பாஸ்மதி அரிசி பிரியாணி, நறுமண பொருட்கள், இறால், மீன் ஆகியவற்றுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள தலசேரி நகரத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் தலசேரி பிரியாணி, பாரம்பரிய பாஸ்மதி அரிசி இல்லாமல் சிறிய மற்றும் தடிமனான கைமா அரிசி கொண்டு தனித்துவமாக தயாரிக்கப்படுகிறது.