8 வருஷ உழைப்பு.. ஒரு போன் கால்; மொத்த பணமும் காலி.! கண்ணீர் விட்டு கதறிய பிக்பாஸ் போட்டியாளர்!
உடலுக்கு பல சத்துக்களை அளிக்கும் வெஜிடபிள் தோசை...5 நிமிடத்தில் வீட்டிலேயே செய்வது எப்படி?.!
பல சத்துக்கள் நிறைந்த, குழந்தைகளுக்கு பிடித்த வெஜிடபிள் தோசை எப்படி செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.
காய்கறிகளை சாப்பிடுவதன் மூலமாக உடலுக்கு தேவையான பல சத்துக்கள் கிடைக்கிறது. எனவே காய்கறிகளை தோசைமாவுடன் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்தது போலவே சுவையான ஒரு ரெசிபியை செய்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
பீன்ஸ் - 10
கோஸ் - 50 கிராம்
கேரட் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
தோசை மாவு - 2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
★முதலில் வெங்காயம், பீன்ஸ், கோஸ், கேரட், கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
★பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
★வெங்காயம் சற்று வெந்தபின், கோஸ், பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும்.
★அனைத்தும் நன்கு வதங்கியதும், அதில் கரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கொத்தமல்லி தழை சேர்த்து கலக்க வேண்டும்.
★இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைகளை ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் வெஜிடபிள் தோசை தயாராகி விடும்.