திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாத்திரங்களை துணிசோப் கொண்டு சுத்தம் செய்பவரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் இந்த தகவல்.!
நமது வீட்டில் அன்றாடம் நாம் சமையலுக்கும், சாப்பிடுவதற்கும் உபயோகம் செய்யும் சமையல்பொருட்களை கவனிப்பது மிகவும் முக்கியமானது. இந்த பாத்திரத்தை கழுவுவது பலருக்கும் பெரும் வேலையாகவே இருக்கும்.
பாத்திரங்களை கழுவுவதற்கென சோப்பு, லிக்யூட் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பாத்திரங்களை சொப்புபோட்டு கழுவலாமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் சோப்புகளில் கெமிக்கல் நிறைந்துள்ளது என்பது உண்மையா? சோப்பு கொண்டு பாத்திரங்களை கழுவினால், சரியாக கழுவாத பட்சத்தில் அவை பாத்திரத்தில் படியும்.
மீண்டும் அதே பாத்திரத்தில் சமைக்கும்போது அவை உணவுப் பொருட்களில் கலந்து உடல் உபாதையை ஏற்படுத்தும். சிலர் பாத்திரங்களை கழுவ துணிசோப்புகளையும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறான துணிசோப்புகளின் கெமிக்கல் மற்றும் உப்புகள் பாத்திரத்தில் படிந்து உடல்உபாதையை ஏற்படுத்தும். சோப்புபாரைவிட லிக்விட் வாசர்கள் சிறந்தது.
இவை சோப்பு கலவையை போன்று பாத்திரத்தில் அதிகமாக படியும் தன்மை இல்லாதது ஆகும். நாம் பாத்திரத்தை எதைக்கொண்டு கழுவினாலும் சுத்தமாக நீரூற்றி நன்கு அலசிய பின்பு உலர வைப்பது நல்லது.