மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடலில் இருக்கும் நோய்களை ஓட வைக்கணுமா.?! நீங்க கொஞ்சம் நடந்தாலே போதும்.!
முதலீடு இல்லாத உடற்பயிற்சிகளில் ஒன்று நடைப்பயிற்சி. அதற்கென எந்த உபகரணங்களும் தேவை இல்லை. தன் காலே தனக்குதவி என்று வீரு கொண்டு நடப்பதால் வரும் பயன்கள் எண்ணற்றவை.
அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சாலச்சிறந்தது. காற்றோட்டமான இடங்களை தேர்ந்தெடுப்பது நல்ல பலன்களை தரும். சம தரைத்தளம் உங்கள் நடையின் வேகத்திற்கு சாதகமாக அமையும்.
குறைந்தது 15 முதல் 30 நொடிகள் வரை நடந்தால் உடல் வலு பெறும். நாம் நடைப்பயிற்சிக்கு செல்லும் இடத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்துவது நல்லது. ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுங்கள். அதிகமான வாகனங்கள் செல்லாத இடங்கள் உங்களுக்கு அமைதியான சூழலை கொடுக்கும். நம்முடைய உடல் ஒத்துழைக்கும் வேகத்தில் நடந்தால் போதுமானது. வியர்வை உறிஞ்சக்கூடிய, இறுக்கம் இல்லாத ஆடைகள் அணிந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. செல்ஃபோன் பேசிக்கொண்டு நடப்பதை தவிர்க்கலாம்.
தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் வரும் பயன்கள் இவை..
நம்முடைய இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
மன சோர்வை போக்குகிறது. இரத்த அழுத்தம் குறையும். நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட இயலும். இரவில் நல்ல தூக்கம் கிடைக்க உதவும். இதயம் வலிமை பெரும். தேவை இல்லாத கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் குளுகோஸ் அளவை குறைக்கிறது.
சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் குணமடையும். நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் வலிமை பெரும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலையும், மனதையும் வலிமையாக வைத்திருக்க உதவும். அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் 'வைட்டமின் டி' கிடைக்கும். நுரையீரலின் ஆக்சிஜன் கொள்ளளவு அதிகரிக்கும். செரிமான தொந்தரவுகள் குறையும்.
சரியான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. உடலில் உள்ள பல உபாதைகளுக்கு எளிய தீர்வாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரே உடற்பயிற்சி நடைப்பயிற்சி மட்டுமே. எலும்புகள் வலவடையும். பக்க விளைவுகள் எதுவும் இல்லாததால், எந்த வயதினரும் இதை மேற்கொள்ள முடியும்.
ஒரு நாளில் உள்ள 24 மணி நேரத்தில் சிறிதளவு நேரம் நம்முடைய நலனுக்காக செலவு செய்வது அவசியம். 2024வது வருடத்தில் நம்முடைய ஆரோக்கியத்திற்கான முதல் அடியை இன்றே எடுத்து வைப்போம்!!!