திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்.? மூடியின் நிறம் பற்றிய ரகசியம் தெரியுமா உங்களுக்கு.?
நீரின்றி அமையாது உலகு என்பது போல மனிதனுக்கு நீரின் தேவை இன்றியமையாதது . மனித உடல் ஆனது 60% நீரால் நிரம்பி இருக்கிறது. மேலும் நாம் அருந்தும் நீரில் பல்வேறு விதமான தாதுக்களும் நிறைந்து இருக்கின்றன. நீர் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு நம் உடலை பல்வேறு விதமான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நகர்ப்புறங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்த தண்ணீர் பாட்டில்கள் இன்று சிறு கிராமங்களிலும் விற்பனைக்கு வந்து விட்டது. சர்வதேச பிராண்டுகள் முதல் உள்ளூர் நிறுவனங்கள் வரை தண்ணீரை விற்பனை செய்கிறது. சூப்பர் மார்க்கெட் முதல் பெட்டிக்கடை வரை தண்ணீர் பாட்டில்கள் கிடைக்கின்றன.
தண்ணீர் பாட்டில் மூடிகள் வெவ்வேறு நிறங்களில் வருகிறது. அவற்றின் நிறத்தை வைத்து அவற்றின் தரத்தை வகைப்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் பாட்டிலின் மூடி வெள்ளை நிறமாக இருந்தால் அது சுத்திகரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தண்ணீர் ஆகும். தண்ணீர் பாட்டில் மூடி கருப்பு நிறமாக இருந்தால் அந்தத் தண்ணீர் ஆல்கலைன் தண்ணீராகும்.
தண்ணீர் பாட்டிலின் மூடி நீல நிறமாக இருந்தால் அந்தத் தண்ணீர் நீரூற்றுக்களில் இருந்து தயாரிக்கப்பட்டது என பொருள்படும். மேலும் பச்சை நிறமாக இருந்தால் அந்த தண்ணீர் சுயூட்டப்பட்டிருக்கிறது என அர்த்தம். இவ்வாறு தண்ணீர் பாட்டிலானது மூடியின் நிறம் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.