மக்களே உஷார்.. உங்கள் குடிநீர் பாட்டிலில் ஒளிந்திருக்கும் பாக்டீரியா..! கழிவறை இருக்கையைவிட 40,000 மடங்கு அதிகமாம்..!!



Water bottle reusable is very danger

நாம் இன்றளவில் பல இடங்களுக்கும் வெளியே சென்று வரும் சூழ்நிலை காரணமாக தண்ணீர் பாட்டில் உபயோகம் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளோம். அவ்வாறு நாம் பயன்படுத்தும் தண்ணீர்பாட்டிலை தினமும் பெரும்பாலானோர் சுத்தம் செய்வது கிடையாது.

மாற்றாக வாரத்திற்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை என அதனை சுத்தம் செய்வோம். இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியதில் பேரதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Water Bottle

அதன்படி மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்படும் குடிநீர் பாட்டிலில், டாய்லெட் சீட்டைவிட 40,000 மடங்கு அதிக பாக்டீரியா இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. 

இவை பெரும்பாலும் சுத்தப்படுத்தப்படாமல் பயன்படுத்தப்படும் பாட்டில்களில் காணப்படுகிறது என்றும், தினமும் பாட்டில்களை மிதமான சூடுள்ள நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து மீண்டும் உபயோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.