திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுட்டெரிக்கும் வெயில்.. வரமாகும் தர்பூசணியில் இவ்வளவு விஷயம் இருக்கா.?!
கோடை காலம் வந்தாலே உடலை குளிர்விக்க கூல் ட்ரிங்க்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் என்று செயற்கை குளிர்பானங்களை சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். இது உடலுக்கு பெரிய அளவில் கை கொடுக்காது. அத்துடன் இதன் பக்க விளைவுகளும் மிக மோசமானவை. கோடை காலத்தில் உடலில் குளிர்ச்சியை தக்க வைக்க பல்வேறு உணவுகள் இருந்தாலும் அதில் இயற்கையான மிக முக்கியமான உணவு தான் தர்பூசணி பழம். பார்ப்பதற்கே குளிர்ச்சியாக இருக்கும் இந்த பழம் நாம் சாப்பிடுவதால் நமது உடலில் நீண்ட நேரம் குளிர்ச்சியை தக்க வைக்கிறது.
மற்ற பழங்களிலும் நீர் சத்து இருக்கிறது ஆனால் அதைவிட 92 சதவீதம் தர்பூசணி பழத்தில் நீர் சத்து இருக்கிறது. எனவே உடல் நீரேற்றமாக இருக்க இது பெரிய அளவில் உதவுகிறது. இந்த தர்பூசணியில் தாமிரம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து, பொட்டாசியம், விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி உள்ளிட்டவை இருக்கின்றன. சிறுநீரகங்களை சிறப்பாக செயல்பட வைக்கக்கூடிய விட்டமின் சி அதிகம் இருப்பது மிகப்பெரிய பிளஸ்.
இந்த விட்டமின் சி உடல் அழகையும் மேம்படுத்த உதவுகிறது. இதழ்கள் வறண்டு போவதை தடுக்கும். இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். கோடையில் சிறுநீர் வராமல் பலருக்கும் சூடு பிடிக்கும். அவர்கள் தர்பூசணி பழத்தை சாப்பிடுவது உடனடி தீர்வு தரும்.
இதனைத் தொடர்ந்து சாப்பிடுவதால் மாலைக்கண் நோய், கண் அழுத்த நோய் உள்ளிட்டவை ஏற்படாது. இதய ஆரோக்கியமும் மேம்படும். இது குறைவான கலோரிகளை மட்டுமே கொண்டிருப்பதால் உடல் எடையை குறைக்க இது உதவுகிறது. வயிறு உப்புசம், பித்தம் அவற்றை இது கட்டுப்படுத்துகிறது.