வாழ்க்கையில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்..! நரகமாக மாற்றி விடும்..!



ways-to-fix-the-mistakes-we-make-in-love-and-marriage-r

காதல் என்பது ஒரு புனிதமான உறவு ஆகும். இந்த காதல் யார் மீது வேண்டுமானாலும் வரலாம். பெற்றோர்கள் மீதும் வரும், கணவன் மனைவி உறவுகளில் வரும், காதலர்கள் உறவிலும் வரும், நல்ல நட்பிலும் வரும். இப்படிப்பட்ட உறவுகளில் நாம் செய்யும் இந்த சிறு தவறு பிரிவில் கொண்டு போய் விடும். அப்படி நாம் செய்யும் தவறு பற்றியும் அதனை சரி செய்யும் வழி பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

காதலில் நாம் செய்யும் தவறு :

எந்த உறவாக இருந்தாலும் அதில் ஒரு நல்ல புரிதல் இருக்க வேண்டும். மேலும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருப்பது மிகவும் அவசியம். அவ்வாறு, இல்லாமல் ஒரு உறவில் எதிரில் இருக்கும் நபர் செய்த தவறை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு அந்த நபரிடம் இருந்து விலகி இருப்பது நல்லதல்ல. இப்படி விலகி இருப்பதால் அந்த நபர் மேல் வெறுப்புணர்ச்சி தான் மேலும் அதிகரிக்கும்.

உதாரணமாக, கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வருவது மிகவும் சாதாரணம். அந்த தருணத்தில் தன் வாழ்க்கைத் துணை செய்த பழைய தவறை மனதில் வைத்துக் கொண்டு சுட்டிக்காட்டுவதும் விலகிச் செல்வதும் அந்த உறவுக்கு அழகல்ல. மேலும், பழைய கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்துக் கொண்டால் அது மனதில் வடுக்களாக மாறி வாழ்க்கைத் துணை மீது வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்துவதோடு அந்த உறவே பிரியும் நிலை ஏற்படும்.

Love and marital relationships

மேலும், காதலர்கள் உறவிலும் தம் காதலர் அல்லது காதலி செய்யும் தவறுகளை மனதில் வைத்துக் கொண்டு அதனை மறக்காமல் இருப்பது மனதில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், கோபம், சோகம் போன்ற எதிர்மறையான உணர்வுகள் நம் மனதில் எளிதில் வெறுப்புணர்ச்சியை விதைத்து விடும். மேலும், எந்த உறவாக இருந்தாலும் அந்த உறவில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியமான ஒன்று. 

இதனை சரி செய்யும் வழி :

எந்த உறவிலும் ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்புணர்ச்சி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி, வெறுப்புணர்ச்சி ஏற்பட்டாலும் நமக்கு ஏன் இந்த கோபம், வெறுப்பு ஏற்படுகிறது என்று தனிமையில் அமர்ந்து சிந்தித்து அதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும். மேலும், காதலர்கள் உறவில் உங்கள் காதலி அல்லது காதலன் மீது எவ்வளவு கோபம் மற்றும் வெறுப்பு இருந்தாலும் அவர்களிடம் அதை தெரிவித்து தனிமையில் அமர்ந்து இருவரும் சிறிது நேரம் பேச வேண்டும். இவ்வாறு, ஒருவருக்கொருவர் மனதில் இருப்பதை பேசும்போது வெறுப்புணர்ச்சி மறைந்து விடும்.