கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஆத்தாடி.. செல்போனை பாக்கெட்டில் வைப்பதால் இவ்வளவு ஆபத்தா?.. எல்லாரும் உஷாரா இருங்க..!!
செல்போனை பாக்கெட்டில் வைப்பதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தற்போதைய சூழலில் மனிதனின் மூன்றாவது கை போல ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டன. செல்போன் அறிவை வளர்த்துக் கொள்வதிலிருந்து வியாபாரம் செய்வது, பணம் செலுத்துவது, குடும்பத்துடன் தொடர்பில் இருப்பது என மக்கள் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், மகிழ்ச்சியாக கழிக்கவும் உதவுகிறது.
இவ்வாறு பல நன்மைகள் இருந்தாலும் ஸ்மார்ட் போனின் மூலம் எதிர்மறை விளைவுகளும் அதிகம் இருக்கத்தான் செய்கிறது. தேவைக்கான பயன்பாடு இவை அனைத்தையும் தாண்டி ஸ்மார்ட்ஃபோனை இப்பொழுது பலரும் உபயோகப்படுத்த தொடங்கிவிட்டனர்.
செல்போன் உடலுக்கு கேடு விளைவிக்குமா? என்று கேட்டால், அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அது பல மாற்றங்களை உண்டாக்கும் என்பது நன்றாக தெரியும். கண் பாதிப்பும் ஏற்படும். பலரும் தங்களது சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டுகளில் செல்போனை பத்திரமாக வைத்திருப்பதை பழக்கமாகவே வைத்துள்ளனர்.
சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த தமிழ்படத்தில் கூட செல்போன் குறித்த விழிப்புணர்வு உள்ளது. லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகர் பிரதீப் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்துவதால் அவரது தாயார் வசைப்பாடுவார்.
செல்போனை சட்டை பாக்கெட்டில் வைத்தால் இதயம் பலவீனமாகும், பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் குழந்தை பிறக்காது என்றும் அவர் கூறுவார். இதனைக்கேட்டு அனைவரும் கைதட்டி சிரித்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம் அவர்களுக்கும் இருப்பது மறுக்க முடியாத உண்மையே. நவீன நாகரிக வாழ்க்கையில் பெண்களின் உடைகளிலும் பாக்கெட்டுகள் வந்து விட்டதால் இந்த பாதிப்புக்கு அவர்களும் ஆளாக நேரிடுகிறது.
செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது உடலில் இருக்கும் உயிரணுக்களையும், திசுக்களையும் பாதிக்கும் என்றும், ஆண்களுக்கு ஆண்மை குறைவு, இருதய நோய் போன்றவற்றையும், பெண்களுக்கு மார்பக மற்றும் இதர பாதங்களில் புற்றுநோய் போன்றவற்றை விளைவிக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.