மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோல்டன் பிளட் குரூப்.!? இப்படியும் ஒரு ரத்த வகை இருக்கிறதா.? தெரிந்து கொள்வோம்.!
நம் அனைவருக்கும் A, B, AB, O பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் போன்ற எட்டு வகையான இரத்த வகைகள் தான் மனித உடலில் இருக்கிறது என்பது பற்றி தெரியும். ஆனால் மக்களுக்குத் தெரியாத ஒரு இரத்த வகை இருக்கிறது.
இந்த உலகில் மொத்தம் சுமார் 8 மில்லியன் மக்கள் தொகை இருக்கிறது. இவ்வளவு பெரிய மக்கள் தொகையில் வெறும் 45 பேரின் உடலில் மட்டுமே இந்த அரிய வகை இரத்தம் இருக்கிறதாம். கேட்கவே கொஞ்சம் அதிர்ச்சியாக உள்ளதா.? சரி அது என்ன இரத்தம் என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த அரிய இரத்த வகையானது Rh factor null ( Rh-null) உள்ளவர்களின் உடலில் மட்டுமே காணப்படுகிறது. இதனால்தான் இதை "கோல்டன் இரத்தம்" என்று சொல்லப்படுகிறது. ஆராய்ச்சியின் போது, 2018 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் இந்த ரத்தத்தை தேடி உள்ளார்கள். அபோதுதான் உலகில் 45 பேருக்கு மட்டுமே இந்த கோல்டன் இரத்த வகை இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதில் ஒன்பது பேர் மட்டுமே இரத்த தானம் செய்ய முடியும் என்று என்று சொல்லப்படுகிறது.
இதன் சிறப்பு என்னவென்றால் யாருக்கு வேண்டுமானாலும் இந்த ரத்தக் குழுவில் உள்ளவர்கள் ரத்தம் செலுத்தலாம். ஆனால் இந்த கோல்டன் ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு அவசர காலத்தில் இரத்தம் தேவைப்படும் போது பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் இதனால்தான் இந்த கோல்டன் இரத்த வகையை விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது.
1960 ஆம் ஆண்டில் இந்த Rh null ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டது. Rh null இ இரத்த வகை அரிதாக இருப்பதால் இதற்கு கோல்டன் ரத்தம் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த வகை ரத்தம் காரணி உடலில் இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இருக்கும் என்கிறார்கள். அமெரிக்கா, பிரேசில், ஜப்பான் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் மட்டுமே கோல்டன் ரத்தம் உள்ளவர்கள் காணப்படுகிறார்கள். இந்த வகை ரத்தம் உள்ளவர்கள் ரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே உணவில் இரும்பு சத்து நிறைந்த பொருளை சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.