"தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!"



What is the benefits for eating orange

நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நாம் தினசரி இயற்கையாக கிடைக்கும் பழங்களை உண்ணவேண்டும். அதிலும் வைட்டமின் சி நிறைந்துள்ள சிட்ரஸ் பழங்கள் நம் உடலுக்கு வெவ்வேறு விதங்களில் உதவுகின்றன. அதிலும் குறிப்பாக ஆரஞ்சு பழம் பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது.

Orange

இதில் புரதம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், விட்டமின் ஏ கால்சியம், விட்டமின் பி6, மெக்னீசியம் உள்ளிட்ட ஏரளாமான சத்துக்கள் நிறைந்துள்ளன. புற்று நோயை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களின் உருவாக்கத்தை எதிர்த்து போராடுகிறது ஆரஞ்சுபழம்.

தினமும் ஒரு ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைத்து, இதயத்தைப் பாதுகாக்கிறது.

Orange

மேலும் ஆரஞ்சுப்பழம் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். நீரழிவுக்கு எடை ஏற்றமும் காரணமாகும். எனவே இதிலுள்ள நார்ச்சத்து பசியுணர்வைக் குறைப்பதுடன், நொறுக்குத்தீனி உண்ணும் ஆர்வத்தையும் குறைக்கிறது. எனவே டைப் 2 நீரிழிவிற்கான அபாயமும் குறைகிறது.