மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைகளுக்கு பசும்பால் நல்லதா எருமை பால் நல்லதா.. மருத்துவர்களின் அறிவுரை.!
நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து அதிகம் காணப்படுவது பாலில் தான். தினமும் உணவில் பால் சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல நன்மைகளை தரும். பாலில் எருமை பால் மற்றும் பசும்பால் என இரண்டு வகைகள் இருப்பதால் எந்த பால் குழந்தைகளுக்கு தரலாம் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்து வருகிறது.
இதில் மருத்துவர்களின் அறிவுரை என்ன தெரியுமா?
பசும்பாலில் கொழுப்பு சதவீதம் மூன்றில் இருந்து நான்கு வரை தான் உள்ளது. ஆனால் எருமை பாலில் 8 முதல் 9 வரை கொழுப்புச்சத்து காணப்படுகிறது. இதனால் எருமைப்பால் எளிதில் ஜீரணமாகாது. மேலும் எருமை பாலில் அளவுக்கு அதிகமான புரதம் இருப்பதால் குழந்தைகள் குடிப்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை.
மேலும் எருமை பால் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள், பிசிஓடி, கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் எருமை பாலை குடித்து வரலாம் என்று கூறுகின்றனர். செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பசும்பால் குடிப்பதே சரியானதாகும்.