சாப்பிடுவதில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு இது தான்.! இனி மாத்திக்கோங்க.!



whats-the-biggest-mistake-of-your-eating-habit

ஒரு மனிதனுக்கு இன்றியமையாத தேவையாக இருப்பது உணவு. அந்த உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்கிறோமா என்றால், இல்லை! எது சரியான நேரம் என்பதில் நமக்கு சரியான தெளிவு இல்லை. எப்பொழுது உணவை உண்ண வேண்டும்?  'பசித்துப் புசி' என்று பெரியோர்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். ஆம், பசி எடுக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்.

Eating right

இந்த இயந்திர உலகில் சாப்பிடும் நேரத்தையும் நமது கடிகாரமே முடிவு செய்கிறது. நமது உடலையும் கொஞ்சம் கொஞ்சமாக இயந்திரமாக மாற்றுகிறது. அதனால் எளிதில் பழுதடைகிறது. நமது ஆரோக்கியம் கருதி காய்கறிகள், பழங்கள், சிறுதானிய வகைகள் என்று அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் நாம், சரியான நேரத்தில் எடுத்துக் கொள்கிறோமா என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்!

இப்போது பலருக்கு பசி என்ற உணர்வே மறந்து விட்டது. பசிக்கும் முன்பே நொறுக்கு தீனி, பழரசங்கள், பஜ்ஜி, போண்டா என்று எதையாவது உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கிறோம். இதனால் நோய்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறோம் என்பதையும் மறந்து விடாதீர்கள்! தேவைக்கு அதிகமான உணவை பசிக்காமலேயே நாம் எடுத்துக் கொள்வதால், உடல் பருமன் அதிகரிப்பதோடு மன அழுத்தம், அஜீரண கோளாறு போன்றவை ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Eating right

'பசி ருசி அறியாது' என்ற கூற்றின்படி, பசித்து உண்ணும் பொழுது நமது நாக்கு, ருசியை பெரிதும் பொருட்படுத்தாது. அதனால் ஆரோக்கியமான உணவுகளையும், இயற்கை உணவுகளையும் எளிதில் உண்ண முடியும். பசிக்காமல் உண்ணும் பொழுது, நமது உடல் சத்துக்களை உறிஞ்சுவது குறைவாக இருக்கும். மாறாக கழிவுகள் வெளியேறுவது அதிகமாக இருக்கும். 

பசித்து உண்ணும் பொழுது செரிமான சக்தி அதிகரிக்கிறது. உணவில் உள்ள முழு சத்துக்களையும் நமது உடல் கிரகிக்கிறது. உங்கள் உடல் நலனை காக்க, கையில் உள்ள கடிகாரத்தை தவிர்த்து, உங்கள் உடலில் உள்ள கடிகாரத்திற்கு செவிமடுங்கள்.