சுவையான கோதுமை ரவை இட்லி எப்பிடி செய்யணும் தெரியுமா.?



Wheat rava idly recipe

தென்னிந்திய உணவுகளில் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாக இட்லி இருந்து வருகிறது. மேலும் இட்லியில் பல வகைகளும் இருக்கின்றது. செரிமானத்திற்கு ஏற்ற உணவாக இட்லி இருந்து வருவதால் காலை உணவாக பெரும்பாலும் மக்கள் இதையே விரும்பி உண்ணுகின்றனர்.

Wheat

ஆவியில் வேகவைத்து இட்லியை சமைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இட்லியை உண்ணலாம். கோதுமை ரவையில் இட்லி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க

தேவையான பொருட்கள்

கோதுமை ரவை - ஒரு கப்
உப்பு, நெய் - தேவையான அளவு
தயிர்  ஒரு கப்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சீரகம், இஞ்சி ஒரு துண்டு பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், கருவேப்பிலை

செய்முறை

ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊத்தி கோதுமை ரவையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் தயிர்,  உப்பு, தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

ஊறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பொருட்களை தாளித்து கோதுமை ரவா மாவில் ஊற்ற வேண்டும்.

Wheat

பின்பு இந்த மாவை இட்லி ஊற்றுவது போல் இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுத்தால் சுவையான கோதுமை ரவை இட்லி தயார்.