மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளியை முன்னிட்டு அதிரடியாக விலைகுறையும் தொலைபேசிகளின் பட்டியல்!
தீபாவளியை முன்னிட்டு பிரபலஆன்லைன் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் அதிரடி சலுகைகளை வழங்கிவரும் நிலையில்
சாம்சங் நிறுவனம், கேலக்ஸி ஜே6, கேலக்ஸி ஜே4, கேலக்ஸி ஜே2 மற்றும் கேலக்ஸி ஜே2 கோர் ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
அதன்படி கேலக்ஸி ஜே6 (3ஜிபி) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,490க்கு விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஜே6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6 இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7870 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது.
கேலக்ஸி ஜே4 பொறுத்தவரை, 5.5 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே உடன், ஆண்டிராய்டு ஓரியோவில் இயங்கக் கூடியது. 2ஜிபி / 3ஜிபி ரேம், 16ஜிபி / 32ஜிபி உள்ளடக்க மெமரி மற்றும் 3000 எம்.ஏ.எச். பேட்டரி உடைய இந்த ஸ்மார்ட்போன், 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்ஃபி கேமராவும் கொண்டது. இது ஏற்கனவே, ரூ.9,990க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டு, ரூ.8,250ஆக உள்ளது.
கேலக்ஸி ஜே2 ஆண்டிராய்டு 7.1 நக்கட் மூலம் இயங்கக்கூடியது. 5 இன்ச் டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட கேலக்ஸி ஜே2, 256ஜிபி வரை விரிவாக்கம் செய்து கொள்ளும் வகையிலானது. 2,600 எம்.ஏ.எச். பேட்டரி, எல்இடி பிளாஷ் உடன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்ஃபி கேமராவை கொண்ட இந்த ஸ்மார்போன், முன்பு ரூ.8,190க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது, ரூ.6,990ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி ஜே2 கோர் ஆண்டிராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டது. 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி, 8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்ஃபி கேமரா, 2,600 எம்.ஏ.எச். பேட்டரியை உடையது. இது ஏற்கனவே ரூ.6,190க்கு விற்கப்பட்ட கேலக்ஸி ஜே2 கோர், தற்போது ரூ.5,990க்கு விற்கப்படுகிறது. இந்த ஆஃபர்கள் அனைத்துமே நவம்பர் 15 வரை மட்டுமே.