#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் கட்சி தாவும் காயத்ரி ரகுராம்.?! அவரே வெளியிட்ட பதிவு வைரல்.!
அரசியல் குறித்த சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை காயத்ரி ரகுராம். முன்னதாக அதிமுக ஆதரவாளராக இருந்த காயத்ரி ரகுராம். ஓரிரு வருடங்களுக்கு முன் பாஜகவில் இணைந்து பணியாற்றினார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் சுறுசுறுப்புடன் பணியாற்றி வரும் காயத்ரி ரகுராம் பாஜகவினரே எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு அவர் சமூக வலைதளங்களில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது
மேலும் பாஜக தமிழக தலைவரான அண்ணாமலையுடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. உள்கட்சி விவகாரம் என்று கூட பார்க்காமல் அதையும் சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டார். இதனை தொடர்ந்து பாஜகவில் இருந்து அவர் தூக்கியடிக்க பட்டார். சிறிது காலம் சத்தம் இல்லாமல் இருந்து வந்த காயத்ரி ரகுராம் திமுகவில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவர் அதிமுகவில் இணைந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் தனது கட்சி துவக்கத்திற்கான அறிவிப்பை ஒவ்வொரு இரு நாட்களுக்கு முன் வெளியிட்டார். இதையடுத்து சமூக வலைதளங்களில் காயத்ரி ரகுராம் குறித்து அவர் விஜயின் கட்சியில் இணையப் போகிறார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் அதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து நான் எப்போதும் அதிமுகவில் இருந்து தான் சேவை செய்வேன் என்று பதிவிட்டுள்ளார்.