கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஓ.பன்னீா்செல்வம் தான் ஒருங்கிணைப்பாளர்..! சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளே வரவேண்டும்.! புதுக்கோட்டையில் ஒன்றிணைந்த தொண்டர்கள்.!
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வரும்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம் அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11ம் தேதி நடைபெறும் என்று தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.
இந்தநிலையில், அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொதுசெயலாளர் ஆவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சட்டரீதியான நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகிற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் முக்கிய நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், புதுக்கோட்டையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அ.தி.மு.க.வினர் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி தலைமை தாங்கி பேசினார். இதில் புதுக்கோட்டை நகராட்சி முன்னாள் தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அறந்தாங்கி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி, வரும் 11-ஆம் தேதி கூட்டப்படும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கண்டிப்பாக செல்லாது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீா்செல்வம் தான். சசிகலா, டி.டி.வி. தினகரன் என அனைவரும் ஒருங்கிணைந்து பழைய அ.தி.மு.க.வாக செயல்பட வேண்டும் என்பது எனது விருப்பம் என தெரிவித்தார்.