மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அ.தி.மு.க பொதுக்குழு அப்டேட்: போலி அடையாள அட்டைகளுடன் நுழைய பலர் முயற்சி செய்ததால் பரபரப்பு..!
அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் போலி அடையாள அட்டையுடன் சிலர் நுழைய முயற்சி செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, அ.தி.மு.க-வில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் தொடங்கியதில் இருந்தே உட்கட்சி பூசலும் வெடித்தது. இந்த நிலையில், அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் இன்று நடைபெறுகின்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னை மற்றும் வெளியூகளில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கான அழைப்பிதழ், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அல்லது வாக்காளர் அட்டை போன்றவற்றை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டதில் கலந்து கொள்ள போலி அடையாள அட்டைகளுடன் பலர் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தில் சுமார் 2,500 பேர் பங்கேற்க உள்ளதாக கூறிய நிலையில் சிலர் போலி அடையாள அட்டையுடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும், இதனால் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.